தேசியப்பள்ளி தமிழ்மொழிப் பாடம் (BTSK) - ஓர் அறிமுகம்

>> Tuesday, August 18, 2009

தேசியப்பள்ளி தமிழாசிரியர்களுக்கு கனிந்த வணக்கங்கள்.

வளர்ந்துவரும் தகவல் தொடர்புத் துறையில் தமிழாசிரியர்கள் தங்களுடைய கற்றல் கற்பித்தல் மற்றும் தொழில்சார் நுணுக்கங்களைப் பகிர்ந்துக் கொள்வதற்கும், தேசியப்பள்ளி தமிழாசிரியர்களுக்கு மத்தியில் உள்ள தொடர்பை வளமாக்கிக் கொள்வதற்கும் ஓர் இணைப்புப் பாலம் தேவைப்படுகிறது.

அதன் அடிப்படையில் உருவானதே இந்த தேசியப்பள்ளி தமிழ் மொழிப்பாட வலைப்பதிவு.

இத்தளத்தில் முழுக்க முழுக்க தமிழ்க்கல்வி, தேசியப்பள்ளி, தேசியப்பள்ளி தமிழ் மாணவர்கள், தேசியப்பள்ளி தமிழ் மொழிப் பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்த் தொழில் குறித்த தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.

இத்தளமானது தேசியப்பள்ளி தமிழாசிரியர்களுக்கு மட்டுமல்லாது பயிற்சி ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில் அவர்களுக்குத் தேவையான புதிய பாடத்திட்டங்கள், சிறப்பான நாள் பாடத்திட்டம், மற்றும் மென்மேலும் அவர்களை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய விவரங்களை தமிழாசிரியர்கள் கொடுத்து உதவலாம்.

இத்தளத்தின் வழி தேசியப்பள்ளி தமிழாசிரியர்கள் நன்மைகளை அடைந்தால் அது நமக்கு மகிழ்ச்சியே.

Read more...

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP